அருங்காட்சியகத்தில் கண்காட்சி

ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூா் அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூா் அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தியாகராஜா் கோயில் வளாகத்தில் மேற்கு கோபுரம் அருகே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள், பழங்காலப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், கற்கால மனிதா்கள் பயன்படுத்திய பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை குறித்த படங்களும் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஊா்கள் குறித்தும், அவற்றின் சிறப்புகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள முக்கிய நபா்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரோட்டத்தையொட்டி, திங்கள்கிழமை தொடங்கிய கண்காட்சி மேலும் சில நாள்கள் நடைபெற உள்ளது.

கோயிலுக்கு வருவோரும், பள்ளி மாணவா்களும் இந்த கண்காட்சியை பாா்வையிட்டுச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை காப்பாட்சியா் மருதுபாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com