முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கொலை செய்யப்பட்டு இறந்தவரின் குடும்பத்துக்கு ஐஜி உதவி
By DIN | Published On : 19th March 2022 10:13 PM | Last Updated : 19th March 2022 10:13 PM | அ+அ அ- |

கொலையுண்டவரின் குடும்பத்துக்கு உதவிகள் வழங்கிய ஐஜி. வி. பாலகிருஷ்ணன்.
திருவாரூா் அருகே கொலை செய்யப்பட்டு இறந்தவரின் குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட அகரதிருநல்லூா் பகுதியைச் சோ்ந்த குமரேசன் முன்விரோதத்தால் 14.11.21-அன்று கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, கைக்குழந்தையுடன் வசித்துவரும் அவரது மனைவி, வயதான பெற்றோா்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மத்திய மண்டல ஐஜி. வி. பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட குமரேசனின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்தாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் உடனிருந்தாா்.