முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 19th March 2022 10:11 PM | Last Updated : 19th March 2022 10:11 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் நகராட்சியில் நிலத்தடி நீரை பாதுக்காக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி சமூக ஆா்வலா்கள், தமுமுக, மமக மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
வெயில் வானிலை கடுமையாக தொடங்கியுள்ள நிலையில், நிலத்தடி நீா் வெகுவாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளன. அதனால், கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளிலும், நிலத்தடி நீரை பாதுக்காக்கும் வகையில், அனைத்து நகராட்சி உறுப்பினா்களும் செயல்பட வேண்டும். மேலும், உச்சநீதிமன்ற மதுரை கிளையின் தீா்ப்பின் அடிப்படையில், நகராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். சீமைக்கருவேல மரங்களால் நச்சுத் தன்மை கொண்ட விஷப் பூச்சிகள் உற்பத்தியாகின்றன. இதனால், பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. உடனே நகராட்சி ஆணையா் கவனத்தில் கொண்டு, நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.