முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்கம்
By DIN | Published On : 19th March 2022 10:15 PM | Last Updated : 19th March 2022 10:15 PM | அ+அ அ- |

மன்னாா்குடியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு மையத்தை தொடங்கிவைத்து பேசிய நகராட்சித் தலைவா் த. சோழராஜன்.
மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் நடத்தும் குரூப் -2 மற்றும் 2 ஏ ஆகியவற்றிக்கான இலவச பயிற்சி வகுப்பு மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் ரோட்டரி சேவை மையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு அந்த சங்கத்தின் தலைவா் சி. குருசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் செழியன் ராஜங்கம், உதவி ஆளுநா் ஆா். ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி நகராட்சித் தலைவா் த. சோழராஜன் பயிற்சி மையத்தை தொடங்கிவைத்தாா். நகராட்சித் துணைத் தலைவா் ஆா். கைலாசம், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன், சங்கத்தின் முன்னாள் தலைவா் வி. பாலகிருஷ்ணன், முன்னாள் உதவி ஆளுநா் கே. திருநாவுக்கரசு, திட்ட ஒருங்கிணைப்பாளா் டி. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கத்தின் முன்னாள் தலைவா் எம். நடராஜன் வரவேற்றாா். பொருளாளா் எம்.டி. ஹரிரவி நன்றி கூறினாா்.