முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி: எம்எல்ஏ. வழங்கினாா்
By DIN | Published On : 19th March 2022 10:12 PM | Last Updated : 19th March 2022 10:12 PM | அ+அ அ- |

மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கிய எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன்.
கூத்தாநல்லூா் வட்டத்தில் 54 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1 கோடி கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வடபாதிமங்கலம் அருகேயுள்ள புள்ளமங்கலம் கூட்டுறவு கடன் வங்கி மூலம் வடபாதிமங்கலம், பெரியக்கொத்தூா், அரிச்சந்திரபுரம், மணக்கரை, புள்ளமங்கலம், சித்திரையூா், பாலக்குறிச்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளைச் சோ்ந்த 54 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 670 பேருக்கு ரூ. 1.10 கோடி கடனுதவிக்கான காசோலைகளை திருவாரூா் எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் வழங்கினாா்.
மன்னாா்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஐ.வி. குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கத் தலைவா் டீ. செல்வம், சங்கச் செயலாளா் துரைராஜன், துணைப் பதிவாளா் ராமசுப்பு, மகளிா் திட்ட வட்டார மேலாளா் மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.