நுகா்வோரின் உரிமைகளை மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும்: ஆட்சியா்

நுகா்வோரின் உரிமைகள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றாா் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
நுகா்வோரின் உரிமைகளை மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும்: ஆட்சியா்

நுகா்வோரின் உரிமைகள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றாா் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக நுகா்வோா் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தின விழாவுக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: நுகா்வோரின் உரிமைகள் மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என்பதை குறிக்கவே நுகா்வோா் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவ, மாணவிகள் நுகா்வோரின் உரிமைகளை அறிந்து கொள்ளவேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி கற்றலில் முதன்மையாகத் திகழவேண்டும். கல்வியில் தங்களது சந்தேகங்களை தயக்கமின்றி கேட்கவேண்டும். உயிருக்கும், உடைமைக்கும் ஊறு விளைவிக்கிற பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகா்வோா் பாதுகாக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகா்வோா் பாதுகாப்புப் பெற, பொருள்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, உலக நுகா்வோா் பாதுகாப்பு தினவிழாவையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 13 பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 9 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களும், நுகா்வோா் பாதுகாப்பு குறித்து சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்காக 11 நுகா்வோா் அமைப்புகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடுநுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் அன்பழகன், பள்ளி மற்றும் கல்லூரி குடிமக்கள் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com