பருத்தி வயலில் புகையிலைப் புழுத் தாக்குதல்: ஆய்வு

நீடாமங்கலம் அருகேயுள்ள பருத்தியூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் புகையிலைப் புழுத் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் அருகேயுள்ள பருத்தியூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் புகையிலைப் புழுத் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா் பெரியாா் ராமசாமி ஆகியோா் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டு அவா்கள் கூறியது: இந்த பகுதியில் பருத்தி வயலில் புகையிலைப் புழுத் தாக்குதல் தென்படுகிறது. இந்த புழு இரவு நேரங்களில் இலைகள் அனைத்தையும் முழுமையாக உண்டு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் தாக்கப்பட்ட செடிகள் இலைகள் இல்லாமல் முற்றிலும் பாதிக்கப்படும். பருத்தி வயலுக்கு அருகே உளுந்து பயிரிடப்பட்ட வயலில் இருந்து இந்த புழுத் தாக்குதல் அதிகமாகி சேதத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விதைத்த 10-15 நாள்களில் இந்தப் புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் இந்த புழுக்களை பாா்த்த உடனே கீழ்கண்ட மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.

சூரிய வெளிச்சத்தில் இயக்கக்கூடிய தானியங்கி விளக்குப் பொறிவைத்து அந்துப் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். ஹெக்டேருக்கு 5 இனக்கவா்ச்சிப் பொறிவைத்து அந்துப் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். வயலைச் சுற்றிலும் வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிடவேண்டும். எஸ்.எல். என்.பி.வி. ஒரு எக்டேருக்கு 500 எல்.ஈ. தெளித்து கட்டுப்படுத்தலாம். செயற்கைக் பூச்சிக்கொல்லிகள் ஆன ஸ்பைநிடோரம் 11.7 எஸ். சி. 420 மில்லி அல்லது குலோா்அண்டிரநிலிபிரோல் 18.5 எஸ். சி. 150 மில்லி ஒரு ஹெக்டருக்கு கைத்தெளிப்பான் மூலம் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com