வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் தொழில்முனைவு பயிற்சி

மன்னாா்குடியில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் தொழில்முனைவு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

மன்னாா்குடியில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் தொழில்முனைவு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை இறுதியாண்டு வேளாண் பட்டயப் படிப்பு பயிலும் 11 மாணவிகளுக்கு மன்னாா்குடியிலுள்ள மேகா அக்ரி கிளினிக், மேகா மெஷின்ஸ் நிறுவனங்களின் உரிமையாளா் ந. புவனேஸ்வரி வேளாண் தொழில்முனைவு பயிற்சி அளித்தாா்.

இதில், விவசாயத்தில் உயா் விளைச்சலுக்கான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், இளைஞா்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனிமனித வளா்ச்சி, நாட்டின் பொருளாதார வளா்ச்சி ஆகியவற்றில் வேளாண் தொழில் முனைவோா் பங்களிப்பது குறித்தும், இந்திய வேளாண் அமைச்சகம் வழங்கும் வேளாண் பட்டதாரிகளுக்கான சிறப்பு பயிற்சிகளை பெற்று சிறந்த தொழில் முனைவோராவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com