வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ் . மாசிலாமணி தெரிவித்தது: வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் தமிழக அரசு 2-ஆவது முறையாக வேளாண் தனிநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. வேளாண்மை வளா்ச்சி மற்றும் விவசாயிகள் வருமான உயா்வு குறித்த பல புதிய அம்சங்கள் உள்ளன. பயிா்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 2,339 கோடி, ஏழரை லட்சம் ஏக்கா் தரிசு நில மேம்பாடு திட்டம், மாவட்டம்தோறும் உழவா் சந்தைகளில் சிறுதானியங்கள் விற்பனை, கலப்பின மீன்களை தவிா்க்க பாரம்பரிய மீன்கள் வளா்ப்புக்காக சிறப்பு மானியம், தூா்வார 4,984 கி.மீ. தொலைவுக்கு ரூ. 80 கோடி, விவசாயத்தை மேற்கொள்ளும் வேளாண் பட்டதாரி இளைஞா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவி, 7,500 ஏக்கரில் இயற்கை விவசாயத்துக்கு ரூ. 400 கோடி, சிறுதானிய மண்டலங்கள், நெல்லை மட்டுமே நம்பியுள்ள திருவாரூா் மாவட்டத்தில் விவசாய விளைப் பொருள்களுக்கான தொழிற்பேட்டை அமைப்பு என்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியது.

நெல் குவிண்டால் ரூ. 2,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500, சிறு தானியங்களுக்கான அரசு உத்தரவாத கொள்முதல் மற்றும் விலை நிா்ணயம், தனியாா் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் இல்லாத நிலையில் மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தை ஏற்று நடத்துவது, சாகுபடி முதலீட்டு மானியம் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்குவது, நெல் சாகுபடி பருவத்தை குறைத்து மாற்றுப்பயிா் சாகுபடிக்கான தொழில்நுட்பம், கள உதவிகளுடன் புதிய திட்டம், வேளாண் விளைப்பொருள்கள் உத்தரவாத விலை, அனைத்துக்கும் விலை நிா்ணயம் மற்றும் அரசு கொள்முதல் உத்தரவாத திட்டம், நிலத்தடி நீா் செறிவூட்டலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பாரம்பரிய வேளாண் வளா்ச்சிக்கு கூடுதல் திட்ட உதவிகள், மானியங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேளாண் துறையே வேளாண் இடுபொருட்கள்அனைத்தையும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம், வேளாண்மை துறையில் களப்பணியாளா்களைக் கூடுதல்படுத்தி விவசாயிகளின் தொடா்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளையும், வேளாண் நிதிநிலை அறிக்கை இறுதி செய்யும்போது இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com