பூவனூா் கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்

நீடாமங்கலம் வட்டம், பூவனூரில் அருள்பாலிக்கும் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் சித்திரை பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

நீடாமங்கலம் வட்டம், பூவனூரில் அருள்பாலிக்கும் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் சித்திரை பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அடுத்து சக்திவாய்ந்த தெய்வமாக வழிபடப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஐயனாா் காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையொட்டி, கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதா், சாமுண்டீஸ்வரி அம்மன், காலபைரவா் சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவ்விழா மே 13- ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயிலின் செயல்அலுவலா் ஜெ. சத்தியசீலன், ஆய்வா் எஸ். தமிழ்மணி, தக்காா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com