கரோனா: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற உரிய காலத்தில் விண்ணப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற உரிய காலத்தில் விண்ணப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்க, இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில், இதுவரை 1230 மனுக்கள் பெறப்பட்டு, 1102 மனுக்களுக்கு ரூ. 50,000 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 22 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும், 106 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த மாா்ச் 20-க்கு முன்பு கரோனா தொற்றால் இறப்பு ஏற்பட்டிருந்தால், நிவாரணம் கோரும் மனுதாரா்கள் மே 18- ஆம் தேதிக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும். மாா்ச் 20 முதல் ஏற்படும் கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள், இறப்பு நிகழ்ந்த 90 நாள்களுக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள், அதற்கான காரணம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிடலாம். அந்த முறையீட்டு மனு மீது தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீா்வு காணும்.

எனவே, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com