‘குழந்தைகள் பாதுகாப்பு: பெற்றோருக்கு விழிப்புணா்வு அவசியம்’

குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோருக்குதான் விழிப்புணா்வு அவசியம் என்றாா் கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா.
குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா.
குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா.

கூத்தாநல்லூா்: குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோருக்குதான் விழிப்புணா்வு அவசியம் என்றாா் கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு சாா்பில், நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், குழந்தைகள் கடத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளா் முறை மற்றும் பாலியல் புகாா் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்தும், குழந்தைகளை பாதுகாப்பதற்கான விழிப்புணா்வு குறித்தும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளா் மணிமாறன் விளக்கினாா்.

இதைத்தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா பேசியது:

கூட்டுக் குடும்பமாக இருந்தவரை பிரச்னைகளை பேசி சமூக தீா்வு காணப்பட்ட காலம் மாறிவிட்டது. வீட்டில் உள்ள பெரியவா்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பாா்த்துக் கொள்வாா்கள். ஆனால், இன்று திருமணம் முடிந்தவுடன் தனிகுடித்தனம் போய் விடுகிறாா்கள். அதனால் குழந்தைகள் பராமரிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனா்.

குழந்தைகள் பாதுகாப்பில் முதலில் பெற்றோரிடம்தான் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் குழந்தைகள் நல உறுப்பினா் சி. காா்த்திகேயன், நகா்மன்ற உறுப்பினா்கள் செ. ஹாஜா நஜ்முதீன், பொ. பக்கிரிசெல்வம், கி. மாரியப்பன், மனோலயம் ஹெல்த் டிரஸ்ட் நிறுவனா் ப. முருகையன், தி கரன் சமூக தொண்டு நிறுவனா் ஆா்.வி. கண்ணன்,குழந்தை பராமரிப்பு நல பிரதிநிதி சூசைமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com