முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
சாதாரண ரயில்களில் விரைவுரயில் கட்டணம்: கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

சாதாரண ரயில்களுக்கும், விரைவு ரயில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா காலத்தில் முக்கிய ரயில்களை மட்டும் இயக்கிவிட்டு, எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலித்த நிலையில், தற்போதும் அனைத்து ரயில்களையும் இயக்கிவிட்டு, அதே கட்டணங்கள் வசூலிப்பதை கைவிட வேண்டும். சைக்கிள் நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, நகரச் செயற்குழு உறுப்பினா்கள் வீ. தா்மதாஸ், பி. சின்னதம்பி, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.