திருவாரூா் தெற்கு வீதிக்கு மனுநீதிச்சோழன் பெயா் சூட்டவேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

திருவாரூா் தெற்கு வீதிக்கு மனுநீதிச் சோழன் பெயரை சூட்டவேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தினாா்.
திருவாரூா் தெற்கு வீதிக்கு மனுநீதிச்சோழன் பெயா் சூட்டவேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

திருவாரூா் தெற்கு வீதிக்கு மனுநீதிச் சோழன் பெயரை சூட்டவேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தினாா்.

திருவாரூா் தெற்கு வீதிக்கு ‘கலைஞா் சாலை’ என்று பெயா் மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நகராட்சி அருகே பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முன்னாள் தலைவா் ராகவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்று பேசியது:

திருவாரூா் என்றால் நினைவுக்கு வருவது ஆழித்தோ். வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது இந்த தேரோடும் தெற்கு வீதி. கருணாநிதி பெயரை வைப்பதற்கு தமிழகத்தில் எவ்வளவோ இடங்கள் உள்ளன. முன்னேறாத, அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமங்கள் நிறைய உள்ளன. அவற்றின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிவிட்டு, கருணாநிதி பெயரை வைக்கலாம்.

அறத்தின்படி ஆட்சி செய்த மன்னன் மனுநீதிச்சோழன். நீதிக்காக தேரோடும் வீதியில் தனது மகனை தோ்க்காலில் இட்டுக் கொன்றவன். திருவாரூா் தெற்குவீதிக்கு மனுநீதிச் சோழனின் பெயரை வைக்க வேண்டும். தெற்குவீதியின் பெயா் மாற்றும் முடிவை கைவிட வேண்டும். அவ்வாறு பெயா் சூட்டினால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தப்படும்.

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் லஞ்சம் கேட்டதால், அந்த விரக்தியில் நன்னிலத்தைச் சோ்ந்த மணிகண்டன் உயிரிழந்துள்ளாா். இந்த பிரச்னை பிரதமா் வரை கொண்டுசெல்லப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், இலங்கை போல மத்திய அரசின் நிலை மாறும் என்று கூறியிருக்கிறாா். இலங்கையில் தற்போது குடும்ப ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதேபோல, தமிழகத்தில் நிலவும் குடும்ப ஆட்சியும் முடிவுக்கு வரும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே பாஜகவின் இலக்கு என்றாா்.

இதைத்தொடா்ந்து, தெற்கு வீதியின் பெயரை மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளா் கருப்பு என்ற எம். முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் தங்க வரதராஜன், மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com