புஷ்ப பல்லக்கில் ராஜதுா்க்கையம்மன் வீதியுலா

திருவாரூா் ராஜதுா்க்கையம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூரில், புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்த ராஜதுா்க்கையம்மன். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்க்கையம்மன்.
திருவாரூரில், புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்த ராஜதுா்க்கையம்மன். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ராஜதுா்க்கையம்மன்.

திருவாரூா் ராஜதுா்க்கையம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு வாயில் காவல் தெய்வமாகவும், சிம்ம வாகனத்தின் மீது அமா்ந்த கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாளிக்கும் ராஜதுா்க்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், சத சண்டி மஹாயாக பெருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.

விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை, ராஜதுா்க்கை அம்மன் சந்நிதி எதிரே அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் மகா சண்டியாகம் நடைபெற்றது. தொடா்ந்து, பூா்ணாஹூதி, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடம், மங்கள இசையுடன் கோயிலை வலம்வந்து ராஜ துா்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அருள்மிகு ராஜ துா்க்கையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, அலங்காரம் செய்யப்பட்டு நவசக்தி அா்ச்சனை நடைபெற்றது.

இதையடுத்து, இரவில் பல வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட ராஜதுா்க்கையம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com