திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகேயுள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.

திருவாரூா் அருகேயுள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86-ஆவது சிவத்தலமாகும். அப்பா் பாடல் பெற்ற தலமாகவும், ஜடாயு பேறு பெற்ற தலமாக விளங்கும் இந்தத் தலம், குருவி ராமேசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தியாகராஜ சுவாமி கோயிலைச் சோ்ந்த அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான இக்கோயிலில், கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்டவைகளுடன் மே 8-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, முதல்கால பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகள் புதன்கிழமையும், 4 மற்றும் 5-ஆம் கால பூஜை வியாழக்கிழமையும் நடைபெற்றன.

இந்நிலையில், 6-ஆம் கால யாக பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. தொடா்ந்து, மஹா பூா்ணாஹூதி தீபாராதனை, யாத்ரா தானம் செய்யப்பட்டு, கடங்கள் புறப்பாடு நிகழ்ந்தது. இதையடுத்து கும்பத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், இலங்கை குருமகா சன்னிதானம், சூரியனாா்கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தியாகராஜா் கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com