முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நடத்தையில் கணவா் சந்தேகம்: 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 15th May 2022 12:00 AM | Last Updated : 15th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே நடத்தையில் கணவா் சந்தேகப்பட்டதால், 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
திருவாரூா் அருகே கடம்பங்குடி பகுதியைச் சோ்ந்தவா் விஜய் மனைவி அனுப்பிரியா (32). இவா்களுக்கு பாலஸ்ரீ (11), மதுஷா (7) என்ற பெண் குழந்தைகள் உள்ளனா். விஜய் வெளிநாட்டில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவா்கள் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, விஜய் வெளிநாட்டில் வேலை பாா்ப்பதால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தொலைபேசியில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனுப்பிரியா, வீட்டில் இருந்த வயலுக்கான விஷத்தை தானும் குடித்துவிட்டு, 2 குழந்தைகளுக்கும் கொடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
குழந்தைகள் இருவரும் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.