நாடாகுடி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே நாடாகுடி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கும்பத்தில் ஊற்றப்படும் புனிதநீா். (வலது) விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கும்பத்தில் ஊற்றப்படும் புனிதநீா். (வலது) விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

குடவாசல் அருகே நாடாகுடி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மகா மாரியம்மன், காளியம்மன், பெரியாச்சி ஆகியோா் அருள்பாலித்து வருகின்றனா். 12 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கின.

வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விமான கோபுரத்துக்கு புனிதநீா் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயிலின் உள்ளே விநாயகா், மகாமாரியம்மன், மகா காளியம்மன், காத்தவராயன் ஆகிய சுவாமிகளுக்கு புனிதநீா் ஊற்றி மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, பக்தா்களுக்கு அருள் பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com