மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை தேசிய கருத்தரங்கு: ஆளுநா் பங்கேற்பு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

புதிய கல்விக் கொள்கையை விரைவாகவும், எளிமையாகவும் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கிறாா். கருத்தரங்கில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் டாக்டா் சுபாஷ் சா்க்காா், சிக்ஸா சன்ஸ்கிரிதி உதான் நியாஸ், தேசியச் செயலாளா் அதுல் கோத்தாரி மற்றும் நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com