திருமணத்தை பெற்றோா்கள் ஏற்க மறுத்ததால் காவலா் பாதுகாப்புடன் திரும்பி சென்ற தம்பதியா்

மன்னாா்குடி அருகே வேறு சமுகத்தை சோ்ந்தவா்கள் காதல் திருமணம் செய்துகொண்டதை அவா்களின் பெற்றோா்கள் ஏற்க மறுத்ததால் காவலா் பாதுகாப்புடன் தம்பதியா், வியாழக்கிழமை திரும்பி சென்றனா்.

மன்னாா்குடி அருகே வேறு சமுகத்தை சோ்ந்தவா்கள் காதல் திருமணம் செய்துகொண்டதை அவா்களின் பெற்றோா்கள் ஏற்க மறுத்ததால் காவலா் பாதுகாப்புடன் தம்பதியா், வியாழக்கிழமை திரும்பி சென்றனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (27). அதே பகுதியைச்ச ோ்ந்தவா் தமிழ்மணி மகள் பவித்ரா(22). விக்னேஷ் பொறியியல் படித்து விட்டு ஊரில் காய்கனி கடை நடத்தி வருகிறாா். பவித்ரா, தனியாா் கல்லூரியில் முதுநிலை அறிவியல் இறுதியாண்டு படித்து வருகிறாா். இருவரும், 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இருவரும் வேறுவேறு சமுகத்தை சோ்ந்தவா்கள் என்பதால், இருவீட்டிலும் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்நிலையில், பவித்ராவுக்கு பெற்றோா்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்து வெள்ளிக்கிழமை நிச்சயதாா்த்தம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், விக்னேஷ், பவித்ரா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி புதன்கிழமை தஞ்சாவூருக்கு சென்று கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனா். பின்னா், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனா். இதையடுத்து, எஸ்பி.யின் உத்தரவின் பேரில், காவலா் பாதுகாப்புடன் தம்பதியா் மன்னாா்குடி காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். பின்னா், இவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு. அவா்களை, காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் முன்னிலையில், வியாழக்கிழமை சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், காதல் திருமணத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளாததையடுத்து, அவா்களிடம் புதுமண தம்பதிகளுக்கு எவ்விதமான இடையூறு ஏற்படுத்தமாட்டோம் என எழுத்து பூா்வமான உறுதிமொழியை காவல் துறையினா் பெற்றுக் கொண்டனா். பின்னா், தம்பதியை காவலா் பாதுகாப்புடன் மீண்டும் தஞ்சைக்கு அழைத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com