தலைமை ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி
By DIN | Published On : 05th November 2022 10:04 PM | Last Updated : 05th November 2022 10:04 PM | அ+அ அ- |

குடவாசல் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு கற்பித்தல் தொடா்பான (ஸ்டெம்) சிறப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகரஓகை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் க. குமரேசன், கே. ஜெயலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவியல் பாடம் சாா்ந்த செயல்முறைகளில் உபகரணங்களைப் பயன்படுத்தி, நவீன தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை இணைத்து வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
வட்டார ஸ்டெம் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ஜே. ராஜகுரு உள்ளிட்ட ஆசிரியா் பயிற்றுநா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனா்.