நெடுஞ்சாலையோர வீடுகளை இடிக்கும் முயற்சிக்கு கண்டனம்

திருவாரூா் அருகே அரசவனங்காடு பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது, சாலையோரம் உள்ள வீடுகளை இடிக்கும் முயற்சிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவாரூா் அருகே அரசவனங்காடு பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது, சாலையோரம் உள்ள வீடுகளை இடிக்கும் முயற்சிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்னை தொடா்பாக, அப்பகுதியை பாா்வையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜனிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தது:

அரசவனங்காடு பகுதி கும்பகோணம் நெடுஞ்சாலையோரம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு எனக் கூறி சிலா் எங்களை காலி செய்ய கூறுகின்றனா். எனவே, இந்த இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி நவ.12- ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்நிலையில், நவ.21-ஆம் தேதிக்குள் காலி செய்யும்படி நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது எனத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஐ.வி. நாகராஜன் தெரிவிக்கையில், ‘40 ஆண்டுகளாக அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்று இப்பகுதியில் மக்கள் வசிக்கின்றனா். குடும்பத்துடன் வசிப்போரை நெடுஞ்சாலைத் துறையினா் காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளது கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்வோம். நிா்பந்தத்தின் காரணமாக நெடுஞ்சாலைத் துறையினா் வீடுகளை இடிக்க முயற்சித்தால் மக்களை திரட்டி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் டி. ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.பழனிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com