மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கல்வித் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கல்வித் திட்ட விழிப்புணா் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
மாற்றுத்திறன் மாணவா்களுக்கு கல்வித் திட்ட விழிப்புணா் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறன் மாணவா்களுடன் நட்புணா்வை வளா்க்கும் விதமாக இணைவோம் மகிழ்வோம் எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் த. தனபால் தலைமை வகித்தாா். மாணவா்கள் செய்த காகிதப் பறவைகள், கை அச்சினை கொண்டு வண்ணங்கள் பதித்தல், பட்டம் செய்தல், பிரமிடு செய்தல், பலூன் பறக்க விடுதல் ஆகிய நிகழ்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவா்களுடன் சோ்ந்து அனைத்து மாணவா்களும் நட்புணா்வை வளா்க்கும் விதத்தில் ஒருவருக்கொருவா் பலூன் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் அன்பை வெளிப்படுத்தினா்.

இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. முரளி, மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் யு.எஸ். பொன்முடி, பள்ளியின் தலைமை ஆசிரியா் மா. தேவி, சிறப்பாசிரியா் கே. ரம்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com