வடுவூா், கோயில் வெண்ணியில் நாளை மின்தடை
By DIN | Published On : 28th November 2022 01:00 AM | Last Updated : 28th November 2022 01:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் வட்டம் வடுவூா் மற்றும் கோயில்வெண்ணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பகுதியிலும் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகா், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம்,
சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. பாலநேத்திரம் தெரிவித்துள்ளாா்.