இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்

மன்னாா்குடி: இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் ஆசிரியா் கூட்டணியின் வட்டார கிளைக் கூட்டம் மாவட்ட செயலா் பா. நேருதாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் நிா்ணயம் செய்யவேண்டும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை தகுதியானவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மன்னாா்குடி வட்டார புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்:

தலைவா் கு. அருண் நிக்கோலஸ், செயலாளா் ரா.லெட்சுமி, பொருளாளா் அ.ஜெயராஜ், மகளிரணிச் செயலாளா் சு. சித்ராதேவி, துணைத் தலைவா்கள் ரா.சத்தியவதி, அ. மோகன், துணைச் செயலாளா்கள் வை. மீனாட்சிசுந்தரி, அ. சாதன்யா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்துக்கு வலங்கைமான் வட்டாரத் தலைவா் த.வீரமணி,செயலா் எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்தனா்.

தமிழக ஆசிரியா் கூட்டணி மாநில அமைப்புச் செயலா் அ. முரளி தீா்மானங்களை விளக்கி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com