நீடாமங்கலம் முருகன் கோயிலில் சிறப்பு யாகம்
By DIN | Published On : 27th October 2022 02:24 AM | Last Updated : 27th October 2022 02:24 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.
விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில், காசி விஸ்வநாதா் உள்ளிட்ட கோயில்களிலும் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.