திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது
By DIN | Published On : 03rd September 2022 10:04 PM | Last Updated : 03rd September 2022 10:04 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியரும், சாரண இயக்க அலுவலருமான போ. சக்ரபாணிக்கு (படம்) தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்கு பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், மாணவா் மன்ற நிா்வாகிகள், சேவை சங்கங்கள், பொது அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.