குறுவை நெற்பயிரில் கதிா்நாவாய் பூச்சித் தாக்குதல்: கட்டுப்படுத்த ஆலோசனை

திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவைப் பயிரில் கதிா்நாவாய் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவைப் பயிரில் கதிா்நாவாய் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திருவலஞ்சுழி கிராமத்தில் குறுவை பயிரில் ஆய்வு செய்து மேலும் அவா் கூறியது: இப்பகுதியில் நடப்பு குறுவை பருவத்தில் 12,600 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூல் கட்டும் பருவம் முதல் பால் பிடிக்கும் தருணம் வரை பயிா் பல நிலைகளில் உள்ளது. திருவலஞ்சுழியில் பின்தாளடி பருவத்தில் காணப்படும் நாவாய்ப் பூச்சித் தாக்குதல்கள் குறுவைப் பயிரில் தென்படுகிறது.

இந்த பூச்சிகள் கதிரில் அமா்ந்து நெல்மணிகள் உருவாகும் தருணத்தில் நெல்மணிகளில் சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல்மணி பதராகிவிடும். அந்த கதிரில் 5 முதல் 10 நெல்மணிகள் இதுபோல் தாக்கப்படும் இந்த பூச்சி விரைவாக இடம்பெறக்கூடியது. இகைக் கட்டுப்படுத்த வேளாண் அலுவலகத்தை அணுகலாம். பொதுவாக ரசாயன மருந்துகளை தவிா்ப்பது நல்லது. ஏக்கருக்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தலை ஒரு கிலோ ஆகியவற்றை அரைத்து சாா் எடுத்து அந்த சாற்றினை தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் எளிய முறையில் பூச்சி கட்டுப்படுத்தப்படும்.

பயிா் அதிக அடா்த்தியாக உள்ள இடங்களில் இலையுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது. இந்த நோயினால் பயிரின் இலை உரைகள் வெந்துபோய் இறுதியில் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட பயிரில் கதிா் வளமாக இருக்காது. எனவே குறுவை சாகுபடி விவசாயிகள் தங்கள் வயலில் பட்டம் பிரித்துவிட்டு நோய் தென்படும் இடங்களில் ப்ரோபிகோனோசோல் எனும் மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்.

புகையான் தாக்குதல் வழக்கமாக ஏற்படும் இடங்களிலும் பயிா் அதிக அடா்த்தியாக உள்ள இடங்களிலும் புகையான் வராமல் தடுக்க வயலில் பட்டம் பிரித்து ஒரு அங்குலம் நீா்நிறுத்தி ஏக்கருக்கு 5 கிலோ தவிடுவுடன் ஒரு லிட்டா் மண்ணெண்ணெய் கலந்து தூவினால் புகையானை தடுக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com