நகராட்சி பூங்காவில் பள்ளி மாணவிகள் தூய்மைப் பணி

மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் செவ்வாய்க்கிழமை நகராட்சி கல்கி பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் செவ்வாய்க்கிழமை நகராட்சி கல்கி பூங்காவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் அருட்சகோதரி ஜெபமாலை தலைமை வகித்தாா். மாவட்ட என்எஸ்எஸ். ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் தூய்மை பணியை தொடங்கிவைத்தாா்.

இதில், இப்பள்ளி என்எஸ்எஸ். மாணவிகள் 50 போ் கல்கி பூங்காவில் தேவையற்ற புல் பூண்டு செடிகளை களைந்தும், முள்செடிகளை அகற்றினா். பின்னா், தூய்மை இந்தியா உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜி. ராஜேந்திரன், ஆசிரியை ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் மேரிசெல்வராணி வரவேற்றாா். திட்ட உதவி அலுவலா் ஷோபனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com