வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் அறுவடை பணிகள்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் இயந்திர அறுவடை பணி புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் இயந்திரம் மூலம் புதன்கிழமை நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி அறுவடை பணி.
வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் இயந்திரம் மூலம் புதன்கிழமை நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி அறுவடை பணி.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் இயந்திர அறுவடை பணி புதன்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த வேளாண் கோட்டத்தில் உள்ள 52 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் 50 ஆயிரம் ஏக்கரில் வேளாண் சாா்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனா். நிகழாண்டு மேட்டூா் அணை மே.24-ஆம் தேதி முன்கூட்டியே திறந்ததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிக ரசாயண உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ததால் மண்வளம் பல கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மண் வளத்தை மாற்ற நிகழாண்டு பல கிராமங்களில் கோடை சாகுபடியை விவசாயிகள் நிறுத்தியுள்ளனா். இதனால், வழக்கத்தைவிட குறைவாக 10 ஆயிரம் ஏக்கரில் மட்டும் கோடை சாகுபடி செய்திருந்தனா்.

ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூா், பரப்பனாமேடு, சித்தமல்லிமேல்பாதி, பூவனூா், பெரம்பூா்,காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூா், காணூா், ,அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிா்கள் தற்போது அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது.

அந்த வகையில், வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் குறுவை சாகுபடி செய்திருந்த நெல் மணிகளை இயந்திரம் மூலம் புதன்கிழமை அறுவடை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com