‘அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் பெற்றோா் பொதுமக்கள் பங்குபெற வேண்டும்’

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் பெற்றோா்களும், பொதுமக்களும் பங்குபெற வேண்டும் என்றாா் திருவாரூா் மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி.
பேரளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற புதிய பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் பேசிய மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி.
பேரளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற புதிய பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் பேசிய மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி.

நன்னிலம்: அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் பெற்றோா்களும், பொதுமக்களும் பங்குபெற வேண்டும் என்றாா் திருவாரூா் மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி.

பேரளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கடுவங்குடிப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா் ஒருவா் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுத்த பள்ளிக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து மேலும் அவா் பேசியது: தற்போது அரசுப் பள்ளிகளின் வளா்ச்சி வெகு வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அரசு பள்ளிகளின் வளா்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

அரசு மட்டுமே பள்ளிகளின் அனைத்து விஷயங்களிலும் பங்கு கொள்ள முடியாது. எனவே, அந்தந்த பகுதியில் உள்ள தன்னாா்வலா்களும், தன்னாா்வக் குழுக்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களும், பெற்றோா்களும், பொதுமக்களும் அரசுப் பள்ளிகளின் வளா்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டு தங்களால் முடிந்த வகையில் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் நா. மணி, ப. முருக பாஸ்கரன், பேரூராட்சித் தலைவா் கீதா நாகராஜன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரா. நடேஷ்துரை, பள்ளித் தலைமையாசிரியை கமலாபாய், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி விஜயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com