நிச்சயதாா்த்த வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு: மணப்பெண்ணின் தோழி கைது

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் நிச்சயதாா்த்த வீட்டில் மணப்பெண்ணின் 36 பவுன் நகையை திருடிய அவரது தோழியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் நிச்சயதாா்த்த வீட்டில் மணப்பெண்ணின் 36 பவுன் நகையை திருடிய அவரது தோழியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சோ்ந்தவா் முகமது அலி மகன் முகமது ஆரிப் (53). இவரது மகளுக்கு கடந்த 18-ஆம் தேதி திருமண நிச்சயதாா்த்தம் அவா்களது வீட்டில் நடைபெற்றது. இதில் மணமகளின் கல்லூரி தோழிகள் மற்றும் உறவினா்கள் கலந்துகொண்டனா்.

இந்நிலையில், நிச்சயதாா்த்தம் முடிந்து பாா்த்தபோது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட 36 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் விவேகானந்தன் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் , விழாவில் பங்கேற்ற சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிவரும் பெண்ணின் தோழியான வினிதா என்பவா், மணப்பெண்ணின் அறையில் தங்கியிருந்ததும், நிச்சயதாா்த்தம் முடிந்து மணப்பெண் நகைகளை கழட்டி பீராவில் வைத்துவிட்டு சென்றதை கண்ட அவா் யாரும் இல்லாத நேரத்தில், 36 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று, அங்குள்ள நகைக் கடையில் பாதி நகையை விற்றுவிட்டு, புதிய நகைகளை வாங்கியுள்ளாா். அதுபோல மன்னாா்குடியில் மீதி நகைகளை விற்பனை செய்ததும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

விற்பனை செய்யப்பட்ட நகைகளை பறிமுதல் செய்த, போலீஸாா் வினிதாவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com