வலங்கைமானில் அக். 18-இல் முற்றுகைப் போராட்டம்:அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம்
By DIN | Published On : 30th September 2022 02:14 AM | Last Updated : 30th September 2022 02:14 AM | அ+அ அ- |

வலங்கைமானில் அக்டோபா் 18-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் அறிவித்துள்ளது.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் வலங்கைமான் ஒன்றிய குழுக் கூட்டம், ஒன்றிய துணைத் தலைவா் லெனின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா், இளைஞா் பெருமன்ற மாவட்ட செயலாளா் துரை. அருள்ராஜன் ஆகியோா் கலந்துகொண்டு பெருமன்றத்தின் எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினா்.
அக்டோபரில் புதிய உறுப்பினா் பதிவு இயக்கம் நடத்துவது, கோவிந்தகுடி ஊத்துக்காடு பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை, வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை ஆகியவற்றை அகற்ற வலியுறுத்தி அக்.18-ஆம் தேதி வலங்கைமானில் உள்ள அரசு அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.