வேலு நாச்சியாா் பிறந்த நாள்
By DIN | Published On : 04th January 2023 12:00 AM | Last Updated : 04th January 2023 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூரில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வீரமங்கை வேலு நாச்சியாா், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் சாவித்திரிபாய் பூலே, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், இவா்களது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வெ. வீரமணி, தமிழ்ச் சங்கத்தின் செயலாளா் செய.அறிவு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் சீனி.செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.