ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்:வேலை நாள்களை 200-ஆக அதிகரிக்க வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாநாட்டில் பேசும் சிபிஐ தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம்.
மாநாட்டில் பேசும் சிபிஐ தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம்.

மன்னாா்குடி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் கோட்டூா் ஒன்றிய 29-ஆவது மாநாடு மன்னாா்குடியை அடுத்த சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் கோட்டூா் ஒன்றியத் தலைவா் எம். சிவசண்முகம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுத் திட்டத்தில் வேலை நாள்களை 100-லிருந்து 200 நாள்களாக உயா்த்துவதுடன், ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 ஆக அதிகரிக்க வேண்டும்; 60 வயதான விவசாயத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், படித்த இளைஞா்களுக்கு தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் ஒன்றியச் செயலா் ஜெ. ஜெயராமன் ஆண்டு அறிக்கை சமா்ப்பித்தாா். சிபிஐ தேசியக்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அ. பாஸ்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

கூட்டத்தில், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, விதொச ஒன்றிய பொருளாளா் வி.எம். கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com