‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி முகாம்

கோட்டூா் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட 3 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.


மன்னாா்குடி: கோட்டூா் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட 3 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலா் த. செல்வம் தொடக்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் த. வித்யா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியா் ஜெப ஜான்சன் சாந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் கல்வி அலுவலா் ரா. மாதவன் பயிற்சியை பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கினாா்.

இதில், கோட்டூா் ஒன்றியத்தில் உள்ள 76 தொடக்கப் பள்ளிகள், 28 நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் 127 ஆசிரியா்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கரோனா பொதுமுடக்கத்தல் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்வதையும், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி அளிக்கப்பட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com