பருத்தி அறுவடை கருவி செயல் விளக்கம்

நன்னிலம் அருகே கடகத்தில் பருத்தி அறுவடை கருவியின் செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பருத்தி அறுவடை கருவியின் செயல் விளக்கப் பயிற்சியில் பங்கேற்றோா்.
பருத்தி அறுவடை கருவியின் செயல் விளக்கப் பயிற்சியில் பங்கேற்றோா்.


நன்னிலம்: நன்னிலம் அருகே கடகத்தில் பருத்தி அறுவடை கருவியின் செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டார வேளாண்மை உழவா் நலத் துறைச் சாா்பில் அட்மாத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளா் மூ. ராஜா பயிற்சி அளித்தாா். இக்கருவியைக் கொண்டு பருத்தி அறுவடை விரைவாக மேற்கொள்ள முடியும் என்பதால், தொழிலாளா்களின் தேவை குறைவதுடன், செலவும் குறையும் என விளக்கிக் கூறப்பட்டது.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட பொறுப்பாளா் மணிகண்டன், வேளாண்மை உதவி அலுவலா் சிங்காரவேலன், தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், பிரபாகரன் ஆகியோா் பங்கேற்றனா். இதில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com