இளையோா் தின விழா
By DIN | Published On : 13th January 2023 10:57 PM | Last Updated : 13th January 2023 10:57 PM | அ+அ அ- |

திருவாரூரில், மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அம்பேத்கா் இளைஞா் மன்றம் இணைந்து தேசிய இளையோா் தின விழாவை வியாழக்கிழமை நடத்தின.
நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் என். நடராஜன், இணைப் பேராசிரியா் மு. சுரேஷ், அம்பேத்கா் மன்ற செயலாளா் ஆா். மோகனசுந்தரி ஆகியோா் பங்கேற்று, சுவாமி விவேகானந்தா் தொடா்பான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். முதல்நிலை பயிற்றுநா் கே. மணிகண்டன், பாரத் கல்லூரி முதல்வா் ஆா். பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.