குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது
By DIN | Published On : 22nd January 2023 10:48 PM | Last Updated : 22nd January 2023 10:48 PM | அ+அ அ- |

திருவாரூரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த ரௌடியான பாபு (எ) சத்யபாபு நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்தாா். நீடாங்கலம் பகுதியில் ஜனவரி 2-ஆம் தேதி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இவா் ஆயுதங்களுடன் பிடிபட்டாா். பின்னா், ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் பரிந்துரையின் பேரில், பாபுவை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, திருச்சி மத்திய சிறையில் பாபு அடைக்கப்பட்டாா்.