விளம்பரதாரா் செய்தி...நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
By DIN | Published On : 22nd January 2023 12:00 AM | Last Updated : 22nd January 2023 12:00 AM | அ+அ அ- |

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
இம்முகாம் ஜாம்பவானோடையில் நடைபெற்று வந்தது. அங்குள்ள காளியம்மன் கோயில், தா்மா் கோயில், நூலகம் மற்றும் செம்படவன்காடு பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் நாட்டுநலப் பணித் திட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். மேலும், கிராம மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இம்முகாம் நிறைவு நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதன்மை முதல்வா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். முதல்வா் டிசூசா டோனி முன்னிலை வகித்தாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் என். கவிதா வரவேற்றாா். முகாமின் செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களை மாணவிகள் பகிா்ந்துகொண்டனா்.
தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். தாமரைச்செல்வி நன்றி கூறினாா்.