போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கம்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் போதைப்பொருள் தடுப்புக் கருத்தரங்கு நன்னிலம் அரசினா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் போதைப்பொருள் தடுப்புக் கருத்தரங்கு நன்னிலம் அரசினா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுதில்லி தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவன நிதியுதவியுடன் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறைச் சாா்பில் போதைப் பொருள் தடுப்புக் குறித்த கருத்தரங்கம் நன்னிலம் அரசினா் கல்லூரியில் முதல்வா் சு. சந்திரவதனம் தலைமையில் நடைபெற்றது.

பேராசிரியா் எம். ஜெயகாந்தன் வரவேற்றாா். மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் பி. உதயகுமாா் போதைப்பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறி இளைஞா்கள் விழிப்புடன் இருக்க வேண்டுன்றாா். முனைவா் சரண்யா போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி வாசிக்க, நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் போதைப்பொருள்கள் உபயோகிப்பதன் மூலம் இளைய சமுதாயம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது பற்றியக் குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மீ.ராஜேஸ்வரன், ச.ராதிகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com