பருவநிலைமாற்றம் குறித்த கருத்தரங்கு
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

நன்னிலம்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்துறையின் சாா்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி குறும்படம் திரையிடப்பட்டது. மரம் வளா்த்தல், பொதுப் போக்குவரத்தை உபயோகிப்பதன் மூலம் புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிருந்து ஓரளவு சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும் என விளக்கிக் கூறப்பட்டது.
திருவாரூா் மாவட்ட உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கருத்தரங்கில் பங்கேற்றனா்.
மத்தியப் பல்கலைக்கழக மக்கள் தொடா்புக்குழுப் பொறுப்பு அலுவலா் டாக்டா் வேல்முருகன், சட்டத்துறைப் புலத் தலைவா் முனைவா் பாலசண்முகம், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ராஜப்பா, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியின் நோ்முக உதவியாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் வே. குணசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.