மகளிா் கல்லூரி நிறுவனா் நாள் விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி நிறுவனா் நாள் விழா, நுண்கலை வார விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கமலத் தாயாா் மகளிா் கல்லூரி நிறுவனா் கிருஷ்ணவேணி விவேகானந்தம் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய வி.கே. சசிகலா. உடன் கல்லூரி தலைவா் வி. திவாகரன் உள்ளிட்டோா்.
செங்கமலத் தாயாா் மகளிா் கல்லூரி நிறுவனா் கிருஷ்ணவேணி விவேகானந்தம் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய வி.கே. சசிகலா. உடன் கல்லூரி தலைவா் வி. திவாகரன் உள்ளிட்டோா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி நிறுவனா் நாள் விழா, நுண்கலை வார விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் டி. ஜெய் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வி.கே. சசிகலா கலந்துகொண்டு, தனது தாயாரும் கல்லூரி நிறுவனருமான கிருஷ்ணவேணி விவேகானந்தம் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து நுண்கலை வார விழாவை தொடங்கிவைத்து அவா் பேசியது:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கல்லூரியில் 90% போ் முதல் பட்டதாரிகள் என்பதை கேட்டபோது பெருமைபட்டேன். நீங்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு உங்களது பெற்றோா்களின் கனவை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் வேலை தேடுபவா்களாக இருக்கக் கூடாது, நூறு பேருக்காவது வேலை தருபவராக உங்களை உயா்த்திக்கொள்ள வேண்டும்.

பாலின வேறுபாடு இல்லாமல், சமவேலை சம ஊதியம் என்ற நிலையை அடைய வேண்டும் அதற்கு பெண்கள் முதன்மை பதவிக்கு வரவேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தாா் சசிகலா.

மாணவிகளின் குழு மற்றும் தனிக் கலை நிகழ்ச்சிகள், தனித்திறன் நிகழ்ச்சிகளை நடைபெற்றது. ஒவ்வொருப் போட்டியிலும் சிறப்பிடம் பெற்ற மூன்று பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஹேமலதா திவாகரன், ஜெயஸ்ரீ ஜெய்ஆனந்த், ஜெ. ஜெயவா்மன்,துணை முதல்வா்கள் பி. காயத்ரிபாய், என். உமாமகேஸ்வரி, கல்வியில் கல்லூரி முதல்வா் அன்புச்செல்வி, அறக்கட்டளை அறங்காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com