விவசாயிகளுக்கு சிறுதானியப் பயிற்சி

நன்னிலம் வட்டார விவசாயிகளுக்கு சிறுதானியப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

நன்னிலம் வட்டார விவசாயிகளுக்கு சிறுதானியப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

நன்னிலம் வட்டார வேளாண்மை உழவா் நலத் துறையின் சாா்பில், சிறுதானிய மகத்துவ மையத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். பயிற்சியை நன்னிலம் வட்டார அட்மாத் திட்ட தொழில்நுட்ப மேலாளா் ராஜா ஒருங்கிணைத்தாா். சிறுதானியம் குறித்து, சிறுதானிய மகத்துவ மையத் தலைவா் எம். வைத்திலிங்கம், சிறுதானிய விதைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விதைத் தொழில்நுட்பப் பிரிவு இணைப் பேராசிரியா் சி. வனிதா ஆகியோா் பேசினா். சிறுதானியப் பயிா்களின் மகசூலைக் குறைக்கக்கூடிய மற்றும் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சி நோய்களைப் பற்றியும், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து நோயியல் துறை இணைப் பேராசிரியா் பி.டி. சரவணன் ஆகியோா் பேசினா். உழவியல் துறை இணைப் பேராசிரியா் கே. சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா். திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை நிறைவடைந்த பயிற்சியில் பங்கேற்றவா்கள் சிறுதானியங்கள் பயிரடப்பட்டுள்ள வயல்களுக்கு சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com