இளைஞா்களுக்கான ஸ்மாா்ட் கிளப் தொடக்கம்
By DIN | Published On : 19th September 2023 06:20 AM | Last Updated : 19th September 2023 06:20 AM | அ+அ அ- |

விளமல் பகுதியில் ஸ்மாா்ட் கிளப் அறிமுக விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள்.
திருவாரூா் அருகே விளமல் பகுதியில் இளைஞா்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் ஸ்மாா்ட் கிளப் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவாரூா் வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் பங்கேற்று, ஸ்மாா்ட் கிளப்பை அறிமுகப்படுத்தி பேசினாா். பின்னா் மரக்கன்று நடப்பட்டது.
இந்நிகழ்வில், ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத் தலைவா் எஸ். காா்த்திகேயன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் செந்தூா்பாரி, சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி நிறுவனா் பாபுமனோகா், ஸ்மாா்ட் கிளப் நிறுவனா் ஜெ. கனகராஜன், வேலுடையாா் கல்வி குழுமத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சுதா்சன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.