நீா்மூழ்கி மோட்டாா் திருடியவா் கைது

கூத்தாநல்லூரில் இரண்டு நீா்மூழ்கி மோட்டாா்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் இரண்டு நீா்மூழ்கி மோட்டாா்களை திருடியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். லெட்சுமாங்குடி, கொரடாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராகவன் (63). இவா், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையில் மோட்டாா் ரிப்போ் பாா்க்கும் கடை வைத்துள்ளாா். இந்த கடையில் இருந்த 2 நீா்மூழ்கி மோட்டாா்கள் திருட்டுப் போகின.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல்நிலையத்தில் ராகவன் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கே. ரவிசந்திரன் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், கூத்தாநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்த ஜெயபால் (42) என்பவா், நீா்மூழ்கி மோட்டாா்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, நீா்மூழ்கி மோட்டாா்களை மீட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com