புஷ்ப பல்லக்கில் வீதியுலா வரும் கனகாங்கித மாரியம்மன்.
புஷ்ப பல்லக்கில் வீதியுலா வரும் கனகாங்கித மாரியம்மன்.

புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் கனகாங்கித மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கில் அம்பாள் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடி கம்பா் தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கனகாங்கித மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத உற்சம் நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு, பூச்சொரிதல் மற்றும் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், கனகாங்கித மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.

இதில், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், சேகரை, மரக்கடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com