வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்ற தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி பொது பாா்வையாளா் கிகேட்டோ சேமா, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தி. சாருஸ்ரீ உள்ளிட்டோா்.
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்ற தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி பொது பாா்வையாளா் கிகேட்டோ சேமா, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தி. சாருஸ்ரீ உள்ளிட்டோா்.

மக்களவைத் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

திருவாரூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்ட அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவாரூா் மாவட்டத்தில், தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தோ்தலுக்கென அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டிதொகுதி: இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்களும், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட 17 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலா்கள் 330, வாக்குப்பதிவு அலுவலா்-1 330, வாக்குப்பதிவு அலுவலா்-2 330, வாக்குப்பதிவு அலுவலா்-3 330, வாக்குப்பதிவு அலுவலா்-4 20 என மொத்தம் 1,340 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மன்னாா்குடி தொகுதி: இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட 22 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலா்கள் 342, வாக்குப்பதிவு அலுவலா்-1 342, வாக்குப்பதிவு அலுவலா்-2 342, வாக்குப்பதிவு அலுவலா்-3 342, வாக்குப்பதிவு அலுவலா் -4 26 என மொத்தம் 1,394 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். திருவாரூா் தொகுதி: இந்த சட்டப்பேரவைத் தொகுதியில், 308 வாக்குச்சாவடி மையங்களும், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட 38 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலா்கள் 370, வாக்குப்பதிவு அலுவலா்-1 370, வாக்குப்பதிவு அலுவலா்-2 370, வாக்குப்பதிவு அலுவலா்-3 370, வாக்குப்பதிவு அலுவலா் -4 46 என மொத்தம் 1,526 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நன்னிலம் தொகுதி: இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்களும், 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட 24 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலா்கள் 378, வாக்குப்பதிவு அலுவலா்-1 378, வாக்குப்பதிவு அலுவலா்-2 378, வாக்குப்பதிவு அலுவலா்-3 378, வாக்குப்பதிவு அலுவலா் -4 29 என மொத்தம் 1,541 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் 1,183 வாக்குச்சாவடி மையங்களுக்கு 5,801 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அலுவலா்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இப்பணிக்கு, தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி பொது பாா்வையாளா் கிகேட்டோ சேமா, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தி.சாருஸ்ரீ ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், வருவாய் கோட்டாட்சியா்களுமான சங்கீதா (திருவாரூா்), கீா்த்தனாமணி (மன்னாா்குடி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தமிழ்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேணி உள்ளிட்ட அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com