மன்னாா்குடி பகுதியில்
துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடி பகுதியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மன்னாா்குடி பகுதியில் 4 இடங்களில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, மேலவாசல் ஆகிய பகுதியில் ஒடிஸா மாநிலத்திலிருந்து வந்துள்ள இந்திய துணை ராணுவப் படையினரின் 70 போ், தமிழக காவல்துறையினா் 30 போ் என 100 போ் பங்கேற்ற கொடி அணிவகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மன்னாா்குடி டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ தலைமை வகித்தாா். இதில்,காவல் ஆய்வாளா்கள் கரிகாற்சோழன், கருணாநிதி, ராஜேஷ், சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com