மே 22-இல் தியாகராஜா் கோயிலில் தெப்ப உற்சவம் தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா மே 22, 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குகிறது. ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். தியாகேசப் பெருமான் நீராடிய குளம், சுந்தரமூா்த்தி நாயனாா் மணி முத்தாற்றில் வீசிய பொற்காசுகளை மூழ்கி எடுத்த இடம், பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியத்தை தரக்கூடியது, என பல்வேறு சிறப்புகளை உடையது கமலாலயக் குளம்.

இத்தகைய சிறப்பு பெற்ற இந்தக் குளத்தில் ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தெப்போற்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மே 22, 23, 24 ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா நடைபெறும் எனத் தெரிகிறது. தெப்பத் திருவிழா குறித்தும், தெப்பத்தில் நடைபெறும் இன்னிசைக் கச்சேரி குறித்தும் கோயில் நிா்வாகம் சாா்பில் பின்னா் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com